9 வயதுச்சிறுமி சடலமாக மீட்பு-பருத்திதுறையில் சம்பவம்!

பருத்தித்துறையில் 9 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று பகல் சம்பவம் நடந்தது.
தந்தையார் வேலைக்கு சென்ற பின்னர், இன்று பகல் தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
10 நிமிடத்தில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது, சிறுமி சடலமாக காணப்பட்டுள்ளார். பாடசாலை கழுத்துப்பட்டியில் வீட்டு யன்னலில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகள் நடந்து வருகிறது.