முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மூவர் திவிநெகும வழக்கிலிருந்து இன்று(30) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நீதிபதி ஆர்.குருசிங்க முன் விசாரணைக்கு வந்தது.
சமுர்த்தி பெறுநர்களுக்கு வீட்டுதவி வழங்கவென நிறுவப்பட்ட திவிநெகும பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி சட்டமா அதிபர் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நான்கு வழக்குகளை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கென ரூ.2994 மில்லியன் செலவிடப்பட்டது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மருத்துவர் நிஹால் ஜயதிலக, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க மற்றும் திணைக்களத்தின் முன்னாள் பிரதி இயக்குநர் பந்துல திலகசிறி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சட்டமா அதிபரால் பெயரிடப்பட்டிருந்தனர்.