சிறிலங்காவில் கொரோனாவை பரப்பும் பொலீஸ்! பொலிஸ் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

கொவிட்- 19 சோதனையில் இரு பொலிஸ் அதிகாரிகள் தொற்று பாதிக்கப்பட்டதாக உறுதியானதையடுத்து மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரு பொலிஸ் நிலையங்கள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நவம்பர் 18 ஆம் திகதி கம்பஹா பகுதியில் நடத்தப்பட்ட கொவிட்-19 சோதனையில் இவ்விரு பொலிஸாரும் நோயால் பாதிக்கப்பட்டமை தெரியவந்தது.

இதையடுத்து இரு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.