உலகம் மதிக்கும் தலைவரே ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் புகழாரம்

உலகம் மதிக்கும் ஒரு தலைவரை நம் குழந்தைகள் காணப்போகிறது என அமெரிக்காவின் துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவில் சிறந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அதிபராக ஜோ பைடன் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,

அமெரிக்காவில் சிறந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியாக ஜோ பைடன் இருப்பார்.

நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத் தளபதியாகவும், அனைத்து அமெரிக்கர்களுக்கான சிறப்பான ஜனாதிபதியாகவும் அவர் திகழ்வார்” என பதிவிட்டுள்ளார்.