ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொரோனா ஆபத்து இல்லாத பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சுகாதார பரிந்துரைகளுக்கமைய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய நாட்களுக்குள் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.