வடக்கில் நேற்று 43 வீத மாணவரே பாடசாலைகளுக்கு வருகை

கொவிட் 19 அச்சத்தினால் மூடப்பட்ட பின்பு நேற்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்கள் 43 வீதமும் ஆசிரியர்கள் 84 வீதமும் மட்டுமே வரவு காணப்பட்டுள்ளது.


வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் 12 கல்வி வலயங்களிலும்
உள்ள மாகாணப் பாடசாலைகளில் தரம் 6 முதல் உயர்தரம் வரையில் மொத்தமாக
ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 855 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் நேற்றைய
தினம் 61 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இதே போன்று குறித்த பாடசாலைகளில் 16 ஆயிரத்து 64 ஆசிரியர்கள் பணியில்
உள்ள நிலையில் நேற்றைய தினம் 13 ஆயிரத்து 434 பேர் கடமைக்கு சமுக
மளித்திருந்தனர்.

ஆயினும் நீண்ட இடைவெளியின் பின் பாடசாலைகள் ஆரம்பித்தமையால் பாடசாலையைத் துப்புரவு செய்யும் பணியே நேற்று இடம்பெற்றதாக அறியக்கிடைத்தது.