மாவீரர் நாள் தடை தொடர்பில் நடந்தது என்ன? தமிழர் தரப்பின் முதல் சறுக்கல்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

என்ற போதும் மாவீரர் தினத்திற்கு தடைகோரி தாக்கல் செய்த மனுக்களை பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிஸார் மீள பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கீழ் நீதிமன்றங்களுக்கு சென்று சட்ட நடவடிக்கைகளை முன்வைத்து இந்த விடயங்களை முதலிலேயே கையாள்வதை விட்டுவிட்டு முதல் தடவையிலேயே மேல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை கொண்டு சென்றமையானது தமிழர் தரப்பின் முதல் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.