பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய 480 மில்லியன் ரூபா -கபில பெரேரா

தற்போது நாட்டின் சூழ்நிலையை கருத்தி பாடசாலை களில் பாதுகாப்பை உறுதி செய்ய 480 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் விசேட வசதிகளை அமைப்பதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாட சாலைகளுக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங் கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும் வரை மீண்டும் திறக்க அனுமதிக் கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாட சாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறி முறைகள் பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள் ளார்.