இலங்கையில் கொரோனா தொற்று க்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிப்பு!

இன்றைய தினம் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட 04 பேரின் மேலதிக விபரங்கள்.

கினிகத்தனையை சேர்ந்த 74 வயதுடைய ஆணாகும்.
நவம்பர் 22ம் திகதி ராகமை வைத்தியசாலையில் மரணமானார்.

சியம்பலாபே வடக்கை சேர்ந்த 54 வயதுடைய ஆண்.
நவம்பர் 22ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமானார்.

கொழும்பு 15ஐ சேர்ந்த 73வயதுடைய பெண்ணாகும்.
இன்று ஹோமாகம வைத்தியசாலையில் மரணமானார்.

பண்டாரகமை அடுலுகமையை சேர்ந்த 42 வயதுடைய ஆண்.
இன்று IDH வைத்தியசாலையில் மரணமானார்.

இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கின்றது.