இந்தியா,இலங்கை உறவு பலமடைந்துள்ளது: இந்தியப் பிரதமர் மோடி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த இரு தரப்பு உறவு குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இந்தியா-இலங்கை உறவு புதிய பகுதிகளாக விரிவடைந்து பலமடைந்துள்ளதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று சவால்களுக்கு இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை அடையாளப்படுத்துவதாக இந்தியப் பிரதமர் கூறினார்.

மேலும் கொவிட்-19 க்கு எதிராகப் போராடுவதிலும் அபிவிருத்தியிலும் இலங்கைக்கு உதவ உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.