விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால்! முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களுக்கு குண்டு போட்டார் மகிந்த

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மனித உரிமைகள் விவகாரத்திற்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

உலகின் பலம்வாய்ந்த நாடொன்றின் தூதுவர் தலைமையிலான வெளிநாட்டு தூதுவர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பொதுமக்களை கப்பல்கள் மூலம் வெளியேற்றும் யோசனையை முன்வைத்தது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இது இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு நாடும் கப்பல் மூலமாக மக்களை வெளியேற்றும் யோசனையை முன்வைத்துள்ளது அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இது குறித்து கருத்து தெரிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நான் பின்னர் ஜனாதிபதியிடம் இன்னொரு நாடு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளதா என கேட்டேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் வடக்கில் சிக்குண்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் அந்த கப்பலில் தப்பிச்செல்லக்கூடும் என்பதால் தான் அவ்வாறு தெரிவித்தேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தான் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதை மகிந்த ராஜபக்ச தெரிவித்துவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.