மாணவனை சுட்டுக்காயப்படுத்தி மருத்துவருக்கு டிசம்பர் 2 வரை விளக்கமறியல்

17 வயது மாணவனை சுட்டுக்காயப்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மருத்துவரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அரவாலாவிலுள்ள தர்மபாலா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த குறித்த மாணவன் விளையாட்டின் போது தொலைந்து போன பந்தைத்தேடி மருத்துவரின் வீட்டுத்தோட்டத்தினுள் நுழைந்தபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களுக்கும் மருத்துவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதுவே மருத்துவர் குறித்த மாணவனை ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கியால் சுட வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையுடன் தொடர்புபட்ட இம்மருத்துவர் இன்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.