தேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்கு செலலுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் என கொழும்பு கஜட் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் கட்சியின் பல உறுப்பினர்கள் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த ஆசனத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.