2020 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்
பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை முதல்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களைத் தவிர நாட்டின் ஏனைய
மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்
ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.