வவுனியா விமானப்படையினர் 10 பேருக்கு கொவிட்-19 மக்களே அவதானம்

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 

நேற்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு
கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

“வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் விமானப் படையைச்
சேர்ந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்குக் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு ள் ளது” எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வவுனியா விமானப் படைத்தளத்தை ஒட்டியுள்ள தனிமைப்படுத்தல்
நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த பத்துப் பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வேறு சில செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.