யாழில் ஒரு கிராமம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சியில் கிராமமொன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துன்னாலை, வேம்படி கிராமம் இன்று அதிகாலை 5 மணி முதல் நெல்லியடி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நான்கு பேரும், சட்டவிரோத மணல் கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்டதென சந்தேகிப்படும் வாகனங்கள் நான்கு, உரிய ஆவணங்களின்றி வேறு வீடுகளில் நின்றபோது கைப்பற்றப்பட்டுள்ளன.