பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது- ஐக்கிய மக்கள் சக்தி

நவம்பர் 23ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண இதனை தெரிழவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது ஆபத்தானது என தெரிவித்துள்ள அவர் பாடசாலைகளை 23ம் திகதி ஆரம்பிக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது முன்னுரிமைக்குரிய விடயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் நிலைமை முன்னேற்றமடைகின்றது என அரசாங்கம் சித்தரிக்க முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலைகளைமீள ஆரம்பிப்பது பொருத்தமான நடவடிக்கையாக என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.