சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் – சுதர்ஷினி

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவு வதைக் கருத்தில் கொண்டு, கைதிகள் மற்றும் சிறை ஊழி யர்களுக்குச் சுதேச மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதி கள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் சமூகத்தில் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது சிறைச்சாலைக்குள்ளும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலாவது கொரோனா தொற்றாளர் ஒக்டோபர் 03 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். இருப்பினும் ஒரு மாதம் சென்றுதான் சிறைச்சாலைக்குள் கொரோனா தொற்றுப் பரவியது.

 

தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய வைத்திய அதிகாரிகளும் இணைந்து சிறைக் கைதிகள் மற் றும் சிறைச்சாலை ஊழியர்களுக்கு சிகிச்சை வழ ங்க ஆயுர்வேத சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு ஆயுர்வேத சிகிச்சை முறையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல திட்டமிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

அத்தோடு, சிறைச்சாலைத் துறையுடன் இணைந்து  பாரம்பரிய முறையில் ஆயுர் வேத சிகிச்சைக்குத் தேவையான மூலப் பொருட்களை எதிர்காலத்தில் பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.