கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையுத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் மாவீரர்களை நினைவுகூர்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று தடையுத்தரவு கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காரியாலயத்தில் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டளையை இன்று காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனுக்கும் இன்று கிளிநொச்சி பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு கரைச்சி பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.