இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா மருந்து தேவையில்லை-சர்ச்சையை கிளப்பிய வாசுதேவ

இலங்கைக்கு தற்போதைக்கு கொரோனா வைரஸ் மருந்துகள் அவசியமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடுகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் முதலாவது அலையின் போது அரசாங்கம் துரிதமாக வேகமாக செயற்பட்டு அதனை கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை தெரியவராத காரணங்களால் வைரஸ்மீண்டும் தலைதூக்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரசிற்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகளும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன என வாசுதேவ தெரிவித்துள்ளார்.
பல உலக நாடுகள் தங்கள் பொருளாதார பலத்தை அடிப்படையாக வைத்து கொரோனா வைரஸ் மருந்தினை பெற முயல்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு மருந்து அவசியமாகயிருந்தால் மருந்துகளிற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் அதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது இதனால் இலங்கை போன்ற நாடுகளிற்கு மருந்து அவசியமில்லை அமெரிக்காவிற்கே மருந்து மிகவும் அவசரதேவையாக உள்ளது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.