வவுனியாவில் கோரவிபத்து; மூவரின் நிலை

 

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளான வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.