தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளை அடுத்த வாரம் விடுவிப்பதற்கு அவதானம் -இராணுவ தளபதி

தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளை அடுத்த வாரம் விடுவிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகக் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த  தனிமைப் படுத்தப் பட்டுள்ள ஏனைய பகுதிகளை அடுத்த வாரமளவில் விடுவிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறி த்து ஆராய்ந்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

 

தற்போது கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி களிலும் , கொழும்பு மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவிற் குட்பட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் முழு வதும் தனிமைப்படுத்துவதா அல்லது அதன் சில பகுதி களை மாத்திரம் தனிமைப்படுத்துவதா என்பது குறித்து ஆராயப்படுகின்றன.

இதன்படி, மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை அடுத்த வாரத்தில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என இராணுவ தளபதி  தெரிவித்துள்ளார்.