டிரம்ப் தொடர்பில் அம்பலப்படுத்தினார் அவரின் நண்பி

இவன்கா டிரம்ப் தனது தந்தையை போல பணம் அந்தஸ்த்து ஆகிய விடயங்கள் குறித்து அதிக வேட்கை கொண்டவர் சிறுவயது முதல் வறியவர்களை அலட்சியம் செய்பவர் என அவருடைய நீண்ட கால நண்பியொருவர் தெரிவித்துள்ளார்.


லைசாண்டிரா ஓஸ்டிரம் என்ற இவன்கா டிரம்பின் நண்பி வனிட்டி பெயரில் இவன்கா குறித்து எழுதியுள்ளார்.
அந்தஸ்த்து குறித்து அதிக வேட்கை கொண்டிருந்த இவன்கா பாடசாலை விதிமுறைகைள மீறுவதற்காக நண்பர்களை கடிந்துகொள்வார்,தன்னை சிறந்த குணாதிசயங்கள் உள்ளவராக காண்பிப்பார் என அவரது நண்பி எழுதியுள்ளார்.


ஒருமுறை சிறிய நகரில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் குறித்த புலிட்சர்விருது பெற்ற நூலை வாசிக்குமாறு நான் இவன்காவை கேட்டுக்கொண்டேன் அதற்கு அந்த- ஏழைகள் குறித்த நூலை நான் ஏன் வாசிக்கவேணடும் என இவன்கா என்னிடம் கேள்வி எழுப்பினார் என அவரது நண்பி எழுதியுள்ளார்.


இவன்கா தான் எந்த புதிய விடயத்தை செய்தாலும் தாங்கள் இதுவரை காணாத திறமை அவரிடம் உள்ளது என ஆசிரியர்களும் ஏனையவர்களும் தெரிவித்தனர் என தெரிவிப்பார் என அவரது நண்பி எழுதியுள்ளார்.
ஒருமுறை அராபியமொழியில் எனது பெயர் பொறிக்கப்பட்ட நெக்லசினை நான் அணிந்திருப்பதை பார்த்த இவன்கா டிரம்ப் கடும் சீற்றத்துடன் கூச்சலிட்டார் எனவும் அவர் எழுதியுள்ளார்.
நான் உண்மையான இவன்கா எப்படிப்பட்டவர் என்பதை தெரிவிப்பதற்காக இதனை எழுதியுள்ளேன் என ஓர்ஸ்டிரோம்

2017 இல் இவன்கா டிரம்பின் ஆலோசகராக இணைந்துகொண்டவேளை அவர் டிரம்பின் மிகவும் பிற்போக்குத்தனமாக இனவெறிபோக்குகளை கட்டுப்படுத்துவார் என நான் எதிர்பார்த்தேன் எனஇவன்காவின் நண்பி எழுதியுள்ளார்.
எனினும் இவன்கா தனது தந்தையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க ஆரம்பித்ததும் அவர் அதுவரை தன்னை பற்றி சித்தரித்த – உருவாக்கிய தோற்றப்பாடுகள் அனைத்தும் காணாமல்போய்விட்டன, எனவும் அவரது நண்பி எழுதியுள்ளார்.