ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சிகள் வழங்கிய அறிக்கைகளை ஒப்படைக்கவும்: சட்டமா அதிபர்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சிகள் வழங்கிய அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் பிரதிகளை வழங்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கோரியுள்ளார்.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பரிசீலிக்க அந்த ஆவணங்கள் கோரப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷார ஜெயவர்தன தெரிவித்தார்.