கோட்டா மகிந்தா தடை போட்டு பாக்கட்டும்!மாவீரர் நினைவேந்தலை நடத்துவோம் – சிவாஜிலிங்கம் சூளுரை

எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது.
அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத் தேவையில்லை. எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமை போல் இடம்பெறும். எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றுகூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமை போன்று நடத்துவோம்.

என்னைக் கைது செய்தால் கைது செய்யட்டும். ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.