கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி திருத்தப்பட வேண்டுமா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் பேரா சிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாட சாலைகளில் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிப்பதில் தா மதம் ஏற்படுவதால் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி திருத்தப்பட வேண்டுமா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது ஆனால் கொ ரோனா தொற்று பரவல் காரணமாக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

தற்போது, பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து சுகா தாரப் பிரிவு வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக் கைகளுக்காகத் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித் துள்ளது.

இருப்பினும், தற்போது ஏனைய மாகாணங்களில் தனி மைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் அமைந் துள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைக்காகத் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடை முறையில் உள்ள சூழ்நிலை காரணமாகத் தரம் 1 முதல் 5 வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 6ஆயிரத்து 257 பாடசாலைகளில் தரம் 6 முதல் 11 வரை வகுப்புகள் கல்வி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

குறித்த பாடசாலைகளில் வகுப்பறை ஒன்றில் 15 க்கு குறைவான மாணவர்கள் நூற்றுக்கு 28.6% வீதமாகும் .

16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நூற்றுக்கு 43.6%. வீதமாகும் .

தரம் 12-13 மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தும் பாடசாலைகள் 2 ஆயிரத்து 898 ஆகும்.

குறித்த பாடசாலைகளில் வகுப்பறையில் 15க்கும் குறை வான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நூற்றுக்கு 53.4% வீதமாகும்.

16 முதல் 30 மாணவர்கள் வரை வகுப்புகள் நடத்தப்படும் பாடசாலைகள் நூற்றுக்கு 36.7% வீதமாகும்.

அதன்படி, தரம் 6 முதல் 13 வரை பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின்  சமூக இடைவெளியைப் பாதுகாத்தல், சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்ற சகல விடயங்களையும் அதிபர்கள் கண்காணிக்க வேண்டும்.

அத்துடன், இதற்காக, பிரதேச பொது சுகாதார அலுவலர், கிராம சேவகர், பாடசாலை மேம்பாட்டுச் சங்கத்தின் பிரதிநிதியும், பழைய மாணவர் பிரதிநிதியும் அடங்கிய குழுவை அதிபர் நியமிக்க வேண்டும்.

குழுவின் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்களத்திற்குப் பொறுப்பான திணைக்கள கல்வி அதிக ரிக்கு அனுப்பப்பட வேண்டும், அதன்படி பாடசாலை களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு பகுதியிலும் பாடசாலைகளை நடத்துவதில் தற்போதுள்ள சவால்களும் சிக்கல்களும் வேறுபட்டிருப்பதால், இது குறித்து தீர்மானத்தை இசுருபாயவிடமிருந்து பொதுவான முறையில் நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்கு அசாத்தியமாக இருப்பதால் அதிபர்கள் குழு மூலம் இந்தத் தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாகக் கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிடும்.

கொவிட் -19 கொரோனா தொற்றால் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிப் பதில் தாமதம் ஏற்படுவதால் பரீட்சைக்கான திகதி திருத்தப்பட வேண்டுமா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு வாரங்களில் சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

பாடசாலைகள் ஆரம்பிப்பதோடு, மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சுகாதார மற் றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத் துறையுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த சில நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.