அக்கரைப்பற்று தனியார் பஸ் சாரதி தலைமறைவு

அக்கரைப்பற்றில் தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் , அவர் – சுகாதார துறைக்கு தெரியாமல் அவரது சொந்த ஊரான வரக்காப் பொல சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

அதேவேளை – அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனையோரை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளது.

ஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாம்பழம் கொள்வனவு செய்கின்ற லொறி சாரதியுடன் வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து அக்கரைப்பற்றில் அவரிடம் மாங்காய்களை கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் மாதிரிகளும் நேற்று பெறப்பட்டுள்ளது.