மூன்று நாடுகளிலிருந்து 297 இலங்கையர் இன்று நாடு திரும்பினர்

இன்று(18) மூன்று நாடுகளிலிருந்து மொத்தமாக 297 இலங்கையர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்படி கட்டார், டுபாய், இந்தியாவின் மும்பையிலிருந்து மொத்தம் 297 பேர் அழைத்து வரப்பட்டனர்.

குறித்த பயணிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையரை அழைத்துவரும் நடவடிக்கையை நாட்டின் கொவிட்-19 நிலைமை காரணமாக இடைநிறுத்தியிருந்த வெளிவிவகார அமைச்சு, கடந்த திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.