மர்ம திரவத்தால் ஒரு இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்…!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணியிலிருந்து கடற்றொழிலிற்க்கு சென்ற இருவரது வலைகள் மர்ம திரவத்தால் நாசமாகியுள்ளது.
கடற்றொழிலிற்க்கு சென்று கொண்டிருந்தபோது கடலில் சிறிய கொள்கலன் இன்று மிதந்து வந்துள்ள நிலையில் அதனை எடுத்து படகில் வைத்து அதன் மூடியை திறந்துள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறிய திரவம் படகிற்க்குள் சிதறுண்டு வலைகள் மீதும் பிஎண்டுள்ளதால் வலைகள் மற்றும் படகு தீப் பற்றியுள்ளன. உடனடியாக செயற்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களும் கடல் நீரை ஊற்றி அணைத்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான வலைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
 இது தொடர்பான விசாரணைகளை பளை போலீசார் அம்மந்தப்பட்டவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.