பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய லொறி-உடல் கருகி பலியான 14 பேர்!சர்வதேச ஊடகங்கள் தகவல்

மெக்சிகோவில் சமையல் எரிவாயு டாங்கர்லொறி ஒன்று வெடித்துச் சிதறியதில் சாரதி உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில், மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள நயாரித் மாகாணத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் திரவமாக்கப்பட்ட சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு டாங்கர் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதி வேகத்தால் இந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதி விட்டு வீதியில் கவிழ்ந்தது.

இதனால் டாங்கரில் இருந்த திரவ வாயு வீதியில் கொட்டி ஆறாக ஓடியது. அதன் பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் டாங்கர் லொறி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் வீதியில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் சிக்கி தீக்கிரையாகின.

இந்தக் கோர விபத்தில் டாங்கர் லொரியின் சாரதி உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.