அடுத்த நான்கு வருடத்தில் இலங்கையின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்- சம்பிக்க ரணவக்க

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக அடுத்த நான்கு வருடங்களில் இலங்கையின் கடன் 28 டிரில்லியனாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதால் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களிடமிருந்து தரவுகளை மறைக்காமல் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும் என சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.