வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு – ரிஷாட்டுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதி, அழிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வனப் பகுதியை அழித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. குறித்த வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரிஷாட் பதியூதீன், அமைச்சராக இருந்த காலப் பகுதியில், வில்பத்து சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியை அழித்து, முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்தார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.