ஜஹ்ரானின் மனைவியின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த எரானை சிஐடியினர் விசாரணைக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரி ஜஹ்ரான்காசிமின் மனைவியின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ணவை பொலிஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்

ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிமின் மனைவியின் பாதுகாப்பு குறித்த தெரிவித்த கருத்திற்காக எரான்விக்கிரமரட்ணவை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.


அவரிடம் விசாரணை செய்ய என்னயிருக்கின்றது அவரது வேண்டுகோளை நடைமுறைப்படுத்தினால் போதும் எனவும் ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.