கொழும்பில் யுவதியின் செயலால் 60 மில்லியன் ரூபா இழப்பு

கொழும்பு நேற்று இடம்பெற்ற விபத்து தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கொழும்பு தாமரை தடாக பகுதியில் அமைந்துள்ள கார் டீலர் நிறுவனம் ஒன்றின் காட்சியறைக்குள் இளம்பெண் ஒருவர் செலுத்தி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததனால், காட்சியறைக்குள் வைக்கப்பட்டிருந்த சொகுசுக்கார்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் 60 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஏற்படுத்திய யுவதியிடம் சாரதி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை என்றும், அவரது தந்தை காவல்துறையில் எஸ்.எஸ்.பி தர அதிகாரி என்றும் சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நடந்த நேரத்தில் யுவதி போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், மேலும் விசாரணைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய யுவதியின் சகோதரர், 2019 மார்ச்சில் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள்-டிஃபென்டர் விபத்தை ஏற்படுத்திய நபர் என்றும் கூறப்படுகிறது.

காலி வீதியில் நடந்த விபத்தில் பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயரிழந்த நிலையில் வாகன சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொழும்பு செல்வந்த வீட்டு பிள்ளைகள் இரவு விடுதிகளிற்கு சென்று வரும் போது இந்த வகையான விபத்துக்கள் சகஜமாக இடம்பெறுவதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு, அமைச்சர் ரம்புக்வெல்லவின் மகன் ரமித் இயக்கிய வாகனமும் விபத்தில் சிக்கியதையும் குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.