யாழில் தீபாவளிக்கு புடவை வாங்கி வீடு திரும்பியவர்களுக்கு வீதியில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம் நெல்லியடியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியரின் தங்கச் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு புடவைகள் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது பிறிதொரு மோட்டார் சைக்கிளில் இவர்களை பின் தொடர்ந்து வந்தவர்கள் இக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.