யாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அடிபட்டு மண்டை உடைத்துக்கொண்ட அண்ணன் தங்கை!

யாழில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் இளம்பெண்ணின் மண்டை உடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் வெளியில் பொழுது போக்குகளுக்காக செல்வதை மக்கள் வெகுவாக குறைத்துள்ளனர்.

இதானால் குடும்பத்துடனிருந்து தொலைக்காட்சி பார்ப்பதையே பொழுதுபோக்காக பலர் கொண்டிருக்கின்றனர், இதனால் சண்டைகளும் இடம்பெறுகின்றன.

அப்படித்தான் அண்ணனும் தங்கையும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க தங்கை பிக்பாஸ் பார்க்கப்போகிறேன் என அடம்பிடிக்க அண்ணன் ஐ.பி.ல் பார்க்கப்போகிறேன் என சொல்ல இருவருக்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கம் ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு கோபமாக மாற தொலைக்காட்சி றிமோட்டால் தங்கையை நோக்கி எறிந்ததில் றிமோட் தங்கையின் தலையில் பட்டு மண்டை உடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது