கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், திடீர் சுகவீனமடைந்தால், அதற்காக அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்புக்கமைய, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 0113422558 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், கொவிட் தொற்றாளர் மேற்படி சேவையை துரிதமாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.