கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்ட்ட தரமற்ற உணவு!

உணவகம் ஒன்று , சாப்பிட சென்றவருக்கு சுகாதார குறைபாட்டுடன் உணவு வழங்கிய நிலையில், அது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகத்திற்கு இரவு உண்வு சாப்பிட சென்ற ஒருவர், பரோட்டாவும் குழம்பும் தாருங்கள் என கோரியுள்ளார்.

அதற்கு கோழி குழம்பு இருக்கு தரட்டுமா என கூறிய கடைக்காரர் கோழி குழம்பை எடுத்து சாப்பாட்டு பிளேட்டில் போட்டபோது கோழியின் தோல் எண்ணெயோடு கலந்து பிளேட்டில் மிதந்ததை பார்த்தவுடன் சாப்பிட சென்ற்வருக்கு அதை சகிக்க முடியவில்லை.

அதுதொடர்பாக கடை உரிமையாளரிடம் வினவியபோது சமையல்காரர் மாறி போட்டு விட்டதாக பதில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வாடிக்கையாளர் இதுதொடர்பாக பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அக்கடை மீது சட்ட நடவடிக்கை எடுதுள்ளனர்.

இந்த நிலையில் உங்களுடைய உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் வழங்கிதான் சாப்பிடுகின்றார்கள். எனவே தயவுசெய்து அதை மனதில் வைத்து செயல்படுமாறு பாதிக்கப்பட்ட நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா அச்சம் நிலவுகின்ற நிலையில் இப்படியான உணவகங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்