சிறிலங்காவில் 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா- மக்களே அவதானம்

நாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 260 பொலிஸ் அதிகாரிகள் மேல் மாகாணத் தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து பதிவாகியுள் ளனர். இவர்களில் 6 பொலிஸ் அதிகாரிகள் ஏற்கெனவே குணமடைந்துள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது.

 

அத்துடன் 355 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுயதனி மைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 1484 ஆகவும் உயர்ந்துள்ளது.

பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட் பட 40 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர்.

இந்நிலையில், கொழும்பு நகர பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர் பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது

குறித்த பொலிஸ் அதி காரிகள் தங்களின் கடமைகளை இன்று முதல் மேற் கொள்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது