ராசி பலன் – 08.11.2020

மேஷம்: அசுவினி: பணியாளர்கள் அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள்.
பரணி: நல்ல செய்தி ஒன்று வரும். பிரச்னையைச் சமாளித்து விடுவீரகள்.
கார்த்திகை 1: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலம் தொந்தரவு வரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அரசால் நன்மை உண்டு. வாகனத்தைச் சரி செய்வீர்கள்.
ரோகிணி: பணியில் மதிப்பு கூடும். முயற்சியால் முன்னேறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: கணவன், மனைவிக்குள் பாசம் குறையாமல் இருக்கும்.
திருவாதிரை: திடீர் பணவரவு காரணமாகப் புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உயர் அதிகாரிகள் பாராட்டும் வகையில் நடப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: புதிய யுக்திகள் கற்பீர்கள். அதிகமாக உழைப்பீர்கள்.
பூசம்: சிலருக்கு புண்ணியச் செயல்கள் செய்யும் எண்ணம் வரும்.
ஆயில்யம்: எதிர்கால முன்னேற்றம் குறித்து செய்த முயற்சிகள் பலிதமாகும்.

சிம்மம்: மகம்: வாழ்க்கைத் துணையின் செயலால் சிறிது ஏமாற்றம் அடைவீர்கள்.
பூரம்: பணவரவு கூடும். முயற்சிகளில் சுமாரான வெற்றி உண்டாகும்.
உத்திரம் 1: தாழ்வுமனப் பான்மை தலைதுாக்க விடாமல் இருங்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: வேலையாட்களை சிறிதும் பகைத்து கொள்ள வேண்டாம்.
அஸ்தம்: சிறிய சாதனைகள் மகிழ்ச்சி தரும். செலவுக்கேற்ற வரவு உண்டு.
சித்திரை 1,2: பயம் நீங்கும். கடன் பிரச்னை பொறுப்பைக் கூடுதலாக்கும்.

துலாம்: சித்திரை 3,4: அனுபவமிக்க பெரியவர்களின் உதவி கிடைக்கும்.
சுவாதி: புதிய முயற்சிகள் தாமதமாகும். காத்திருந்த வாய்ப்பு வரும்.
விசாகம் 1,2,3: அதிகாரிகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: ஆசைப்பட்ட பொருட்களை வாங்கும் முன் சற்று யோசியுங்கள்.
அனுஷம்: இளைஞர்கள் சிறு பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
கேட்டை: தன்னம்பிக்கை துளிர்விடும். முந்தைய முயற்சிகள் பலன் தரும்.

தனுசு: மூலம்: குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்விப்பீர்கள்.
பூராடம்: நல்லவர் உதவுவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
உத்திராடம் 1: உங்களை பற்றிய வதந்திகள் வராதபடி கவனமாக இருங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய தேவை வரும்.
திருவோணம்: குடும்பத்தில் உள்ள ஒருவர் மூலம் நன்மை அடைவீர்கள்.
அவிட்டம் 1,2: புதிய சாதனையின் மூலம் பலரின் பாராட்டைப் பெறுவீர்கள்

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் மதித்து விரும்பும் ஒருவரின் பாராட்டு கிடைக்கும்.
சதயம்: விட்டுப்போன உறவு பல காலத்துக்குப் பிறகு சமாதானமாகும்.
பூரட்டாதி 1,2,3: சேமிக்க தொடங்குவீர்கள். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: புதுமை படைக்கும் திறன் பெருகும். நிறையக் கற்பீர்கள்.
ரேவதி: நன்மைகள் ஏற்படும். மேலதிகாரிகள் அன்புடன் உதவுவார்கள்.