அதி உச்ச பெரும்பான்மையுடன் வெல்லப்போகின்றோம்- பைடன்

ஜனாதிபதி தேர்தலில் தெளிவான பெரும்பான்மையுடன் வெல்லப்போகின்றோம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
சற்று முன்னர் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெற்றி குறித்த இறுதி அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை ஆனால் வெளியாகிவரும் தகவல்கள் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்பதை தெரிவிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெறப்போகின்றோம்,நேற்று முதல் இடம்பெற்ற விடயங்களை பாருங்கள் 24 மணிநேரத்திற்கு முன்னர் ஜோர்ஜியாவில் பின்னிலையில் இருந்தோம்,நாங்கள் தற்போது முன்னிலையில் இருக்கின்றோம் நாங்கள் அங்கு வெற்றிபெறப்போகின்றோம் என பைடன் தெரிவித்துள்ளார்.
24 மணிநேரத்திற்கு முன்னர் நாங்கள் பென்சிலவேனியாவில் பின்னிலையிலிருந்தோம்,ஆனால் நாங்கள் அங்கு வெற்றிபெறப்போகின்றோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.


நாங்கள் அரிசோனாவில் வெற்றிபெறுகின்றோம் நெவாடாவில் வெற்றிபெறுகின்றோம்,நெவாடாவில் எங்கள் வாக்குகள் இரண்டுமடங்காக அதிகரித்துள்ளன, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எங்கள் பின்னால் உள்ளது நாங்கள் தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.