ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார் விளாடிமிர் புடின்? பரபரப்பு தகவல்

ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரபல அரசியல் நிபுணர் Valery Solovei தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில், பிரபல அரசியில் நிபுணர் Valery Solovei பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புடினின் 37 வயது காதலி Alina Kabaeva-வும் அவரது இரண்டு மகள்களும் அவரை அதிபர் பதவியிலிருந்து விலக வலியுறுத்துவதாக Valery Solovei கூறினார்.

புடினுக்கு குடும்பம் உள்ளது, குடும்பத்தினர் அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். எனவே ஜனவரி மாதத்தில் தனது ராஜினாமா குறித்த திட்டங்களை பகிரங்கப்படுத்த அவர் விரும்புகிறார் என்று Valery Solovei கூறினார்.

அண்மையில் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வெளிப்படுத்தியிருப்பதால் புடின் அந்நோயால் அவதிப்படக்கூடும் என்றும் Valery Solovei தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர்களுக்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு வழங்கும் சட்டத்தை சமீபத்தில் புடின் முன்மொழிந்தார்.

அதிபரினால் முன்மொழியப்பட்ட சட்டத்தை ரஷ்ய எம்.பி-க்கள் பரிசீலித்து வருவதற்கு மத்தியில் புடினின் ராஜினாமா குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.