போக்குவரத்து அபராதம் செலுத்த விசேட சலுகை

கொரோனா தொற்று காரணமாகத் தபால் அலுவல கங்கள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து அபராதம் செலுத்த முடியாத இக்கட்டான நிலையிலுள்ள பொது மக் களுக்காக சலுகைக் கொள்கையைப் பின்பற்றத் தீர் மானித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன் படி கொவிட் -19 கொரோனா தொற்றின் இரண் டாவது அலை காரணமாக தபால் அலுவலகங்களின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட நாட்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நாட்கள் இவற் றைத் தவிர்த்து ஏனைய நாட்களைக் கணக்கில் கொண்டு போக்குவரத்து அபராதத் தொகையைச் செலுத்த வேண் டும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை நிதி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.