மினுவாங்கொடை கொத்தணி விவகாரம் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் அறிக்கையிடுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி உருவான விதம் குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

 

பிரெண்டிக்ஸ் கொரோனா கொத்தனியிலிருந்து 4000இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் கடந்த ஒக்டோபர் 3ஆம்திகதியிலிருந்து அடையாளம் கண்டுவந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்திலிருந்தே இந்த ஆடைத்தொழிற்சாலைக்குள் கொரோனா பற்றியதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்த நிறுவனத்தினால் இந்தியாவிலிருந்து குழாம் ஒன்று அழைக்கப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் அடியோடு நிராகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மினுவங்கொடை கொரொனா கொத்தனி குறித்து விசாரணை நடத்த தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களிற்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இதனாலேயே இது தொடர்பிலான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாமை குறித்து சட்டமா அதிபரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.