பெரும் கூச்சலிட்டு வன்முறையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், போட்டிக்களத்தின் முக்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களில் வெற்றியை முடிவு செய்ய இயலாத நிலையில் அங்கு பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் எனவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை போர்ட்லாண்டு, ஓரிகன் ஆகிய பகுதிகளில், டிரம்புக்கு எதிராக போடப்பட்ட ஒவ்வொரு ஓட்டும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என போரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

விஸ்கான்சின், மிச்சிகன் மாநிலங்களில் ஜோ பைடன் வென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் தான் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் முழக்கமிட்டார். அதனால் இன்று பல மாநிலங்களில் சட்டப் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்.

அந்த போராட்டத்தின் போது சிலர், சில கடைகளின் ஜன்னல்களை உடைத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு கலவரம் எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மினியாபொலிஸில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 200 போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் டிரம்பிற்கு எதிராகவும், வாக்கை நிறுத்துமாறு டிரம்ப் கூறியதற்கு எதிராகவும் போராடினார்கள் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல நியூயோர்க், ஃபிலடெல்ஃபியா மற்றும் சிகாகோவிலும் போராட்டங்கள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஃபீனிக்ஸ் மற்றும் அரிசோனாவில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிரான சிறியதொரு போராட்டமும் நடைபெற்றது. டெட்ராய்டில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஜன்னலில் இருந்து வாக்கு எண்ணுவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.