தேர்தலில் வென்றால் வெறும் 77 நாட்களில் செய்து முடிப்பேன்! அடித்துக் கூறும் பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாக ஜோ பிடன் உறுதி அளித்துள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ஒரு நாடு விலக வேண்டும் என்றால் அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.

அமெரிக்காவின் காத்திருப்புக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக நேற்றையதினம் வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜோ பிடன் நேற்றையதினம் இரவு – தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், இன்று ட்ரம்ப் நிர்வாகம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது. இன்னும் சரியாக 77 நாட்களில், பிடன் நிர்வாகம் மீண்டும் அதில் சேரும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பருவநிலை மாற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்காக பிடன் 5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார்.