கொரோனாவினால் மரணமடைந்த 5 பேருடைய விபரங்கள்

கொரோனா காரணமாக மரணமடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1. 46 வயதான ஆண் – கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். நீண்டகாலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்

2. 68 வயதான பெண் – வெல்லாம்பிட்டியைச் சேர்ந்தவர். கொழும்பு தேசிய வைத்தியசலையில் மரணம். நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டவர்.

3. 58 வயதான பெண் – கொழும்பு 12 இல் உள்ள வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. கொரோனா காரணமாக அது மோசமடைந்துள்ளது.

4. 73 வயதான பெண்மணி – கிரான்டபாஸ் பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்துள்ளார். சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். கொரோனாவினால் அது மோசமடைந்தது.

5. 74 வயதான ஆண். கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்திருக்கின்றார். இருதய பாதிப்பு கொரோனாவினால் மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.