முகக்கவசம் அணியாதோர் மீது இராணுவம் அடாவடி-மக்களே அவதானம்

மட்டக்களப்பு நகரில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரைக் கைதுசெய்ய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாத பலர் இந்நடவடிக்கையின் போது மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்களது முழுத் தகவல்களும் திரட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருவதையடுத்தே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைக்கபட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.