பாக். பிரதமர் இம்ரான்கான் போதைப்பொருள் பயன்படுத்துவார்!- முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் , தற்போதைய பிரதமருமான, இம்ரான் கான், போதைப் பொருட்களைப்  பயன்படுத்துவார்,” என, முன்னாள் கிரிக்கெட் வீரர், சர்பராஸ் நவாஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சர்பராஸ் நவாஸ், அண்மையில் ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது:நானும், இம்ரான்கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் போதைப் பொருள்களை பயன்படுத்துவார். வாயில் மெல்வது, புகைப்பது என, பல வழிகளில், போதைப் பொருள்களை அவர் பயன்படுத்துவார்.

கடந்த, 1987ல், இங்கிலாந்து அணியுடன் விளையாடச் சென்றோம். அப்போது அவர் சரியாக பந்து வீசவில்லை. அதனால் அவர் விரக்தியில் இருந்தார். நாடு திரும்பியதும், இஸ்லாமாபாதிலுள்ள என் வீட்டுக்கு வந்தார்.

அவருடன் மோஷின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகிய முன்னாள் வீரர்களும் வந்தனர். என் வீட்டில், அவர் போதைப் பொருளை பயன்படுத்தினார். லண்டனில் இருந்தபோதும், அவர் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். இதை அவர் மறுக்க முடியாது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு, பல சாட்சியங்கள் உள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.