சவுதி அரேபியா கொரோனா வைரசுக்கு-கோட்டா வழங்கிய 48 மணிநேர அவகாசம்

சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிர்க்கதியான நிலையில், 150 பாதுகாப்பு விடுதிகளில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைய, 48 மணிநேரத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளனர்.

இத்தகவலை கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் கொரேனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.